தொழில் கல்லூரியில் வன்முறை; ஒருவர் பலி , 10 பேர் காயம்

பின்லாந்தின் கிழக்கு ஃபின்னிஷ் நகரில் உள்ள ஒரு தொழிற்கல்வி கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு , 10 பேர் காயமடைந்தனர்.

 "அதிகாரிகள் சூழ்நிலையின்போது துப்பாக்கிகளை பயன்படுத்தினர். குற்றம் புரிந்தவர் ஒருவரை காவல்துறையனர்தடுத்து வைத்துள்ளனர். காயமடைந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்,  ' ' என கிழக்கு பின்லாந்து காவல்துறையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 "தற்போதைய தகவல்களின்படி, குப்கோ பகுதியில் நடந்த சம்பவம், ஹெர்மன் வணிக வளாகத்தில் அமைந்துள்ள சவோ தொழிற்பயிற்சிப் பள்ளியின் வளாகத்தில் நிகழ்ந்துள்ளது" என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரை காவல்துறையினர்  கைது செய்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதில் 10 பேர் கயமடந்த நிலையில் ,2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவக்கப்படுகிறது.

இந்த தாக்குதலில் ஒரு வாள் போன்ற கத்தி பயன்படுத்தப்பட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

No comments