யாழ்.விமான நிலையத்திற்கு போவதற்கே பிரச்சினையாம்?


யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்திற்கென திட்டமிடப்பட்ட பாதையினை விடுவிக்க விமானப்படை மறுத்துவருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த போக்கெவரத்திற்காக தீர்மானிக்கப்பட்ட கட்டுவன் மயிலிட்டி வீதியின் 400 மீற்றரை அபகரித்துள்ள விமானப் படையினர் குறித்த வீதியை விடுவிக்க மறுப்பதனால் வீதிச் சீரமைப்பு பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி,பிரதமர் என பலரும் படை எடுக்கவுள்ள திறப்பு விழா 17ம் திகதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில் குழப்பம் தோன்றியுள்ளது.

கட்டுவன் மயிலிட்டி வீதியில் கட்டுவன் சத்தியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் வரை தார் படுக்கை வீதி அமைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்த் திசையிலும் கிராமக் கோட்டுச் சந்தியை அண்மித்த தூரம் வரையில் குறித்த வீதி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இடைப்பட்ட 400 மீற்றர் தூரத்தின் பிரதான வீதி விமானப் படையினரின் பிடியில் இருப்பதனால் மக்களின் நிலங்கள் ஊடாகவே தற்போது போக்கு வரத்து இடம்பெறுகின்றது.

இந்த நிலையில் எதிர் வரும் 17ம் திகதி விமான நிலையம் உத்தியோக பூர்வமாக திறக்கப்படுவமற்காக வீதியை உடன் சீரமைக்க வேண்டிய தேவை உள்ளபோதும் ஆக்கிரமித்துள்ள 400 மீற்றர் வீதியினை விடுவிப்பதற்கு விமானப்படையினர் தற்போது மறுப்புத் தெரிவித்து தனியார் நிலத்தின் ஊடாக பாதையினை அமைக்குமாறு கோரியுள்ளனர். 

இதனையடுத்தே அடுத்த கட்டம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

No comments