தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வு

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.  மாலதியின் 32ம் நினைவு வணக்க நிகழ்வானது  தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் வட மேற்கு பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழீழ தேசிய கொடியினை தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் வடமேற்கு நிதிப்பொறுப்பாளர் செல்வசுந்தரம்  அவர்கள் ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரினை கப்டன் உதயதீபன் அவர்களின் சகோதரன் ஈசன்  ஏற்றி வைத்தார். திருவுருவத்திற்க்கான மலர் மாலையை லெப் கேணல் தயாளன் அவர்களின் சகோதரி  திருமதி கல்யாணி தவராசா அவர்கள் அணிவித்தார் .
நிகழ்வில் எழுச்சி கானத்தினை செல்வி சானுகா தவராசா மற்றும் கதிரவன் மகேந்திரன் இசைக்க எழுச்சி கவிதையை தாஸ் மற்றும் தமிழ் உதயா வழங்க தொடர்ந்து ஸ்ரீ மதி மயூரி அவர்களின் மாணவி மதுநயா ஜெயந்தன் எழுச்சி நடனத்தை வழங்கினார்.
முன்னாள் மன்னார் அரசியல் துறை  பொறுப்பாளர் சுரேஸ் அவர்களின் உரையினை தொடர்ந்து சயோன் மற்றும் ஆங்கிலத்தில் செல்வன் ஆதி வழங்கினார் ஆகியோர் உரையாற்றினார்கள்.
தேசிய கோடி கையேந்தலுடன் மாலதியின் கனவை நனவாக்குவோம் என்கின்ற உறுதி மொழியோடு  நிகழ்வானது நிறைவு பெற்றது.

No comments