மாணவிகள் உட்பட மூவர் படுகாயம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதிக்குட்பட்ட லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று (07) இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையிலிருந்து பாடசாலை மாணவிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும், லிந்துலையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற பாடசாலை சேவை பேருந்தொன்றும் நேர்க்கு நேர் மோதியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் வாகனத்தின் சாரதி உள்ளிட்ட மூன்று மாணவிகள் படுகாயங்களுக்கு உள்ளாகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து சாரதியின் கவனயீனத்தின் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் ஏற்பட்டதாகவும், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments