புளியங்குள விபத்தில் ஒருவர் பலி!


வவுனியா –யாழ்ப்பாணத்திற்கிடையேயான புகையிரத விபத்துக்கள் தொடர்கதையாக நீடிக்கின்றது.

புளியங்குளம் பகுதியிலுள்ள பரிசன்குளம் புகையிரத வீதியில் புகையிரதத்தில் மோதுண்டு பரிசங்குளம் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த விக்கினன் (வயது 47) என்பவர் இன்று காலை மரணமாகியுள்ளார்.

அவரது உடல் புளியங்குளம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் வாய்பேச முடியாதவர் என தெரியவருகின்றது.
இலங்கை காவல்துறையினர் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments