தாக்குதல் நடத்திய பி.சபை தலைவருக்கு சக உறுப்பினர்கள எதிர்ப்பு!

முறிகண்டி பிரதேசத்தில் பொதுமகன் மீது புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் தாக்குதல் நடத்தியமை தவறானது என பிரதேச சபை உறுப்பினர்கள் குடும்பத்தினரிடம் வருத்தம் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த பகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கியமை தொடர்பான காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவியதுடன், பல்வேறு விமர்சனங்களும் தவிசாளர் பிறேமகாந் மீது முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று (02) முற்பகல்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் நேரில் சந்தித்து விடயங்களை கேட்டறிந்ததுடன், அப்பகுதியில் உள்ள பொது அமைப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த உறுப்பினர்கள் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வின்போது பேசப்படும் என தெரிவித்தனர்.

No comments