கோத்தாவிற்காக வக்காலத்து வாங்கும் சுகு?


யுத்தத்தை கோத்தா வழிநடத்தவில்லையென சுகு எனப்படும் முன்னாள் ஈபிஆர்எல்எவ் பிரமுகர் தெரிவித்துள்ளார்.முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராசாப்பெருமாள் தலைமையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சீற்றிற்காக கோத்தாவுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது.

அவரது சார்பில் பிரச்சாரத்தினில் ஈடுபட்டுள்ள சுகு 1970 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இராணுவமயமாக்கப்பட்ட அரச இயந்திரம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. எனவே, கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகவிருந்த யுத்தகாலத்தில் நடந்த சம்பவங்கள் தனிநபர் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அரச இயந்திரத்தினாலேயே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனத்தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராக தி. சிறீதரன்(சுகு தோழர்) உள்ளமை தெரிந்ததே.

No comments