தமிழ் மீனவர்களை விடுவிக்க யாழில் கோரிக்கை?


பருத்தித்துறை மற்றும் எழுவை தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் மீனவர்கள் இந்திய தமிழக புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே திட்டமிட்டே தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதான தீவக வடக்கு மீனவ சமாசம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

கைதான அனைத்து மீனவர்களும் சாதாரண சிறு படகுகளை மட்டும் வைத்து தொழில் செய்பவர்கள்.அவர்கள் நண்டு பிடிப்பதை மட்டுமே செய்கின்றனர்.
அவர்களது படகுகளில் 200 கிலோ வரை மட்டுமே மீனை கொண்டுவரமுடியும்.

இந்நிலையில் அப்பாவியான தமிழ் மீனவர்களை இந்திய கடற்படை இந்திய கடற்பரப்பினுள் வந்திருப்பதாக கைது செய்வது எதற்காகவெனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஐகதான அனைத்து தமிழ் மீனவர்களும் விடுவிக்கப்படவேண்டுமென வலியுறுத்திய அவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த இலங்கை இந்திய அரசுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக தமது குடும்பத்தவர்களது விடுதலையினை வலியுறுத்தி யாழிலுள்ள இந்திய துணைதூதரையும் குடும்பங்கள் சகிதம் மீனவ சங்கப்பிரதிநிதிகள் சந்தித்து பேசியிருந்தனர்.

No comments