போக்கிடமில்லை:பொதுஜனபெரமுனவில் சுதந்திரக்கட்சி?


குழப்பங்களின் மத்தியில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  தனித்து வேட்பாளரை களமிறக்காத நிலையில் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி இருந்து வந்தது.
இந் நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பமான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நிமல் சிறிபால டிசில்வா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments