பதுங்குகுழியிலிருந்த புலித்தொப்பி:அப்பாவி கைது?


புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் கைவிடப்பட்ட பதுங்கு குழியினிருந்து எடுக்கப்பட்ட இராணுவ சீருடை மற்றும் புலி சின்னம் பொறிக்கப்பட்ட  தொப்பியினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டுத்திட்டத்தின் கீழ் தனது காணியில் வீடமைக்க துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இளைஞன் அதனை தனது நண்பர்களுடன் மீட்டுள்ளான்.

அதன் பின்னராக தனது நண்பர்களுடன் தொப்பி அணிந்து புகைப்படம் பிடித்து அதனை முகநூலிலும் பதிந்துள்ளனர்.

பின்னராக அதனை வவுனியா கொண்டுவருகையிலேயே புதிய பஸ் நிலையத்தில் நேற்று கடைமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார்; சோதனைகளை மேற்கொண்டபோது அவரிடமிருந்து விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, சீருடை ஒன்றும்(ரீசேட்) மீட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த  இளைஞர் ஒருவரே  கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இதனை மீண்டும் புலிகளது மீளெழுச்சியென பிரச்சாரப்படுத்த தென்னிலங்கை இனவாத சக்திகள் மும்முரமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments