தொடர்ந்தும் முகாம்களில் வலி.வடக்கு மக்கள்?


வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் 24 இடைத்தங்கல் முகாம்களில் 34 வருடங்களை தாண்டி தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 5168 குடும்பங்களின் நிலம் உள்ளது. இதில் 528 குடும்பங்கள் 24 முகாம்களில் உள்ளனர.

மயிலிட்டி பிரதேசத்தில் உள்ள 431 குடும்பங்களின் காணிகள் உள்ளிட்ட படைத்தரப்பு ஏனைய காணிகள் தொடர்பில் இழுத்தடிப்புக்களை செய்துவருகின்றது.

அதேநேரம் நடேஸ்வராக்கல்லூரியின் அருகேயுள்ள புகையிரதப்பாதையோரம் அமைந்துள்ள காணிகளும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இழுத்தடிக்கப்படுகின்றது.
அதேநேரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 3028 ஏக்கர் தனியார் நிலம் படையினர் வசம் உள்ளது. இதில்வலி. வடக்கில் 5168 குடும்பங்களின் நிலம் உள்ளது. இதில் 528 குடும்பங்கள் 24 முகாம்களில் உள்ளனர். வலி.வடக்கில் மட்டும் 21 கிராம சேவகர் பிரிவு படையினர் வசம் உள்ளது.

பலாலி றோட்டிற்கு கிழக்கு 1829 குடும்பங்களின் 719 ஏக்கர் நிலம் உள்ளது. அதேபோல் மயிலிட்டி துறைமுகம் விடுவித்தமை போன்று அப்பகுதி நிலத்தினையும் விடுமாறு கோருகின்றனர். இதில் 3 கிராம சேவகர் பிரிவின் 190 ஏக்கர் நிலம் உள்ளதென மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

No comments