சஜித்தின் அழைப்பையேற்று மீண்டும் ஐதேகவுடன் சங்கமித்தார் திஸ்ஸ


ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணையுமாறு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவால் விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டை இன்று (25) சற்றுமுன் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்தார்.

இதன்படி, சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று ஐதேகவில் இணைந்து சஜித்தை ஆதரிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க உறுதியளித்தார்.

இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்சியை விட்டுவெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments