மல்லாகத்தில் தொடரும் போராட்டம்?


மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவரும், சட்டத்தரணியுமான சுகாஸ் தாக்கப்பட்டமைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு வழியமைத்துக் கொடுத்த கொடுத்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் யாழ். மல்லாகம் நீதிமமல்ன்ற சட்டத்தரணிகள் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு  வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி நீதிமன்ற சட்டத்தரணிகள் இன்று புதன்கிழமை(25) முற்பகல்-10 மணி முதல் மல்லாகம் நீதிமன்றத்தின் முன்பாகத் தமது வாய்களைக் கறுப்புத் துணியால் கட்டிக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான சோ.தேவராஜா, மேற்படி சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவரும், சட்டத்தரணியுமான க. சுகாஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள் 'நீதிமன்றக் கட்டளையை மீறியவர்களை உடனடியாக கைது செய்!', 'சட்டம் என்ன காடையர்களின் சொத்தா?', 'பொலிஸ் பாதுகாப்பு மக்களுக்கா? அல்லது காடையர்களுக்கா?' உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது கைகளில் தாங்கி  எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

No comments