மக்கள் முன்னணியுடன் நடைபயணத்தில் கூட்டணியும்?


தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவிலிருந்து புறப்பட்ட பேரணி தென்மராட்சியை வந்தடைந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி தரப்பும் இணைந்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்படும் நடைபயணியில் தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் சி.அருந்தவபாலனும் இணைந்து இன்று பயணித்திருந்தார்.

நாளை நல்லூரை சென்றடையவுள்ள இப்பேரணியில் நாவற்குழியிலிருந்து பெருமளவு மக்களை அணிதிரட்டி செல்ல அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

No comments