வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்!!


வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடொன்றிற்குள் நுளைந்த நபர் ஒருவர் அங்கு இருந்த பெண் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த சட்டையை கிழித்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் தோணிக்கல் ஆலடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் இளைஞர் குறித்த பெண்ணின் இருப்பிடத்தில் சில காலமாக திருமணஅழகுபடுத்தலுடன் தொடர்புடைய வியாபார நிலையம் ஒன்றை  நடத்தி வந்தநிலையில் அது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக நேற்று மாலை குறித்த வீட்டிற்கு சென்ற நபர் அங்கிருந்த பெண்ணை தாக்கியதாகவும், அவர் அணிந்திருந்த சட்டையை கிழித்து தகாத வார்தை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் பெண்ணின் மகனால் தெரிவிக்கப்பட்டதுடன், இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும். தெரிவித்தார்.

No comments