ஜெயானந்தமூர்த்தி பாய்ந்தார்:கவலையில் கூட்டமைப்பு!


கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி கோத்தபாயவுடன் இணைந்துள்ளதாக சுமந்திரன் ஆதரவாளர்கள் பிரச்சாரங்களில் குதித்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி பொது ஜன பெரமுன கடசியில் இணைத்துள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராசபக்சவுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூட்டமைப்பின் சுமந்திரன் ஆதரவு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஜெயானந்தமூர்த்தி 2004 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 44,457 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு இறுதியுத்தம் நடைபெற்ற போது தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சென்று குடியேறியிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தார்.

ஏற்கனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கட்சி தாவிய நிலையில் தற்போது ஜெயானந்தமூர்த்தியின் பாய்ச்சல் நடந்துள்ளது.

No comments