மீண்டும் ஜனாதிபதி கனவிற்காகவே சவேந்தராவிற்கு பதவி


யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள  சவேந்திர சில்வாவை  இராணுவ தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை படையினர் ஐநா அமைதிகாக்கும் படையிலிருந்து தடை செய்யப்படும் நிலைஉருவாவதற்கு  காரணம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
அறிக்கையில் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது.இலங்கை படையினர் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஐநா தடை செய்துள்ள அறிவிப்பு இலங்கைக்கு துயரமானதாக அமைந்துள்ளது.
ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள  சவேந்திர சில்வாவை  இராணுவ தளபதியாக நியமிப்பதன் மூலம் தேர்தலில் தனக்கு ஆதரவை அதிகரிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட முயற்சிகளே இலங்கை இந்த நிலையை எதிர்கொள்வதற்கு காரணம்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் 2008- 2009 களில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவிற்கு தலைமை தாங்கியமை தெரிந்ததே.

No comments