யாழில் அதிரடிப் படை துப்பாக்கி சூடு; இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் - அரியாலை, நெடுக்குளம் பகுதியில் இன்று (14) மாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் சூட்டில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

கள்ள மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை படையினர் தடுத்து நிறுத்தியபோது அவர் எச்சரிக்கையை மீறி சென்றதால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.அரியாலையில் சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது இலங்கை காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டினில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.இன்று மாலை இச்சமபவம் நடைபெற்றிருந்தது.
அரியாலை கிழக்கிலிருந்து கட்டட வேலைக்கான மணலை ஏற்றிவந்த போதே துப்பாக்கி பிரயோகம் நடந்துள்ளது.
காயமடைந்த நபர் யாழ்.போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments