சஜித்திற்கு வடக்கிலிருந்து முதலாவது ஆதரவு!


எதிர்வரும் தேர்தலில் சஜித் பிரேமதசாவை ஆதரிப்பதை தவிர தமிழ் மக்களிற்கு வேறு தெரிவுகள் இல்லாதிருப்பதாக மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாளர் நாயகமும் சமூக செயற்பாட்டாளருமான கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அதனாலேயே தமது கட்சி ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை பிறேமதாசாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே சஜித் பிறேமதாசவை ஆதரிக்க பணம் பெற தமிழ் தரப்புக்கள் முற்படுவதாக சொல்லப்படுகின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறு பணம் வாங்க பைகளுடன் செல்லும் பழக்கம் தனக்கு இல்லையென தெரிவித்தார்.

அவ்வாறு பைகளுடன் பணத்திற்கு அலைபவர்கள் பலர் இருக்கின்றனர்.கடந்த ஜந்து வருடங்களில் அவர்கள் மக்களிடம் பேரம் பேசுவதாக தெரிவித்து கல்லா கட்டி கொழும்பில் செட்டில் ஆகியுள்ளனர்.

எனது வாழ்வு போராட்ட சூழலில் ஆரம்பமானது.எனக்கு சொந்த பணத்தை மக்களிற்கு செலவிட்டுத்தான் பழக்கமேயன்றி பணத்திற்காக அரசியல் தலைவர்களின் பின்னால் திரிந்த பழக்கமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளை வான் கடத்தல்களின்றி எமது மக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

சுpல கட்சிகள் வேட்பாளர்களுடன் பேரம் பேசப்போவதாக சொல்கின்றனர்.அவர்களது பேரம் தமது கல்லாவை கட்டுவதற்கு மட்டுமேயென்பது தமிழ் மக்களிறகு நன்கு தெரியும்.

ஏற்கனவே சஜித் உடன் பேசியுள்ளேன்.அவர் மூலம் அரசியல் கைதிகளது விடுதலை உள்ளிட்ட சிலவற்றை செய்யலாமென நம்புகின்றேன்.

தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மாகாணங்களிற்கு அதி உச்ச அதிகாரங்களை வழங்கப்போவதாக அவர் தெரிவித்தமை தொடர்பிலும் கணேஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் மோகனதாஸ் அவர்களும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments