''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் பிறக்கட்டும்’’ தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் சபதமெடுப்போம்

காலாகாலமாக இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும், உயிர்பறிப்பிற்கும் நீதிகேட்டு நிற்கும் தமிழர்களாகிய நாம், அதனை திட்டமிட்டு அழித்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் எந்த
அரசிடமோ அதன் தலைமையிடமோ  எப்போதும் நீதிகிடைக்காது என்ற முடிந்த முடிவினால் சர்வதேசத்திடம் நீதி கேட்டு ஐ.நா அமைப்பின் மனிதவுரிமைகள் அமைப்புகளதும், ஐரோப்பிய அரசுகளினதும், தமிழர்கள் வாழும் நாடுகளின் அரசுகளின் கதவுளை கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக தட்டியே வருகின்றோம்.

2009ல் உச்ச இனவழிப்பை சிங்களம் மேற்கொண்டு இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உயிர்களைப் பறித்து, அங்கவீனர்களாக்கியதோடு, பெற்றவர்களையும், கணவர் துணைவியர்களை பிள்ளைகளை இழந்து நிற்போருக்கு அதற்காகன நீதியையும், பதிலையும் பொறுப்பையும் சிங்கள அரசு கூறாமல், மாறாக மனவுழைச்சலை ஏற்படுத்தி அவர்களின் சனநாயகப்போராட்டத்தையும் உதாசீனப்படுத்தி வருகின்றது.

தமிழின அழிப்பிற்கு  தமது சுயநலத்திற்க்காக வல்லரசுகளும், சிறீலங்காவை கையகப்படுத்த நினைக்கும் நாடுகளும் துணைபோயிருந்தன.  இலங்கை தீவின் பிரச்சனைகளுக்கு ஆளும் பேரினவாத இனவாத அரசுகளும் ஆட்சியாளர்களுமே பொறுப்பேற்க வேண்டிய நிலையில் அதற்கு மாறாக சர்வதேச நாடுகள் ஐ.நாவின் மனிதநேய மனிதவுரிமைகள் அமைப்பும் ஐரோப்பிய நாடுகளும்  விடுக்கும் ஆலோசனை களையும்,  அறிவுரைகளையும் புறந்தள்ளி உதாசீனம் செய்யும் வகையில் தமிழ்மக்களின் உயிர்களைப் பறித்தவர்களையும், பறிப்பதற்கு உத்தரவிட்டவர்களையும் இராணுவத்தளபதிகளாக நியமித்து தனது நன்றியை விசுவாசத்தையும் வழங்கியிருக்கின்றது.

தமிழினத்தை மேற்கொண்ட மகிந்த அரசை அகற்றுங்கள், தமிழ்மக்கள் எமது சொந்த நாட்டு குடிமக்கள் அவர்களுக்கும் சமவுரிமையுண்டு என்றும் என்னை பலமுள்ள சனாதிபதியாக்குங்கள் என்றும் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிப்பீடமேறிய புலம்பெயர் தமிழ்மக்களின் சனநாயகப் போராட்டங்களால் ஐரோப்பிய அரசும், ஐரோப்பிய நாடுகளும், தாயகத்தின் உண்மை நிலவரத்தையும் கண்ணுற்ற நாடுகள் கொடுத்த அழுத்தங்களின் பயனாக ஒத்துக்கொண்டவற்றில் சில வாக்குகளை மட்டும் நடைமுறைப்படுத்தியது. ஆனால் இதுவரை பொறுப்புக் கூறவேண்டிய காணமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, சிறையில் வாழும் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழர்களின் பூர்வீக நிலங்கள் விடுபடாதமை, தமிழர் நிலங்களில் கண்டெடுக்கப்பட்ட புதைகுழிகளின் எலும்புக் கூடுகள், புத்தகோயில்கள் தமிழர் பகுதியில் அத்துமீறல்களாக அமைத்தல் மறைமுகமாக விபத்துக்கள் மூலம் தினமும் உயிர்கள் பறிப்பு, வாள்வெட்டு,  போதைபொருள் விற்பனை இவ்வாறு பல்லாயிரம் இராணுவத்தையும், காவல்துறையினரையும் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் வைத்துக்கொண்டே செய்து வருகின்றது.

இவ்வாறு தொடர்ந்தும் ஏமாற்றத்துக்கு உள்ளான தமிழினம் இனியும் சிங்கள தேசத்தையே அரசுகளையோ நம்பி எதுவும் நடைபெறப்போவதில்லை என்ற நிலையில் எதுவந்தாலும் என்ற நிலையில் வரப்போகும் சனாதிபதித்தேர்தலை முற்று முழுதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் புறக்கணிகப்போவதாகவும், அதனை பயன்படுத்தி எம்மினத்தில் இன்னும் தன்மானம் கெட்டு சோரம் போய் வாழும் தமிழர்கள் அயல்நாட்டின் கீழ்த்தரமான நேர்மையற்ற பணவாக்குகளையும், சலுகை வாக்குகளையும் பெற்றுக்கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்ற நிலையில்.

எமது மக்களின் விடுதலைத் தீயை அணைந்து விடாது களத்திலும் புலத்திலும் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். புலத்தில் மார்ச் மாதத்தில் நீதிக்கான பேரணியும், செப்ரெம்பர் மாதம் தியாகத்தின் தீபம் திலீபனின் நினைவை நெஞ்சிலும் சுமந்து ஐரோப்பிய ரீதியிரான ஈருருளி பயணப்போராட்டமும், பாரிசிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கால் நடையாக கவனயீர்ப்பு போராட்டத்தையும், பரப்புரைகளையும் நடாத்தி வருவதோடு, தாயகத்தில் எழுகதமிழ் எழுச்சி பேரணி நிகழ்வுகளையும், பொங்குதமிழ் நிகழ்வுகளையும் நடாத்தியே வருகின்றனர்.

இந்த வகையில் தமிழீழத்தேசித்தலைவர் அவர்கள் 1995 ஆம் ஆண்டு மாவீரர்நாள் கொள்கைப் பிரகடனத்தில் கூறிய வார்த்தைகளை தூரநோக்கோடு நாம் பார்க்க வேண்டும்.

நாம் எமது இழந்த மண்ணை மீட்டெடுக்க முடியும். நாம் சொந்த இடங்களுக்கு சுதந்திர மனிதர்களாக திரும்பிச் செல்லமுடியும். தமிழர் தமது தேசம் தனது படைப்பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். என்பது இன்றைய தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவையாகவுள்ளது. தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு இது அவசியம். போராடித்தான் வாழவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தமிழ்த் தேசம் தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த தேசியப் பணியிலிருந்து வரலாற்றின் அழைப்பிலிருந்து தமிழ் இளம்பரம்பரை ஒதுங்கிக்கொள்ள முடியாது தாமதிப்பது எமது இனத்திற்கு பேராபத்தை விளைவிக்கும்.

எமது போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தமிழ் இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன். எவ்வளவு சீக்கிரத்தில் தமிழ் இளம் சந்ததி எமது இயக்கத்தில் இணைந்து கொள்கின்றதோ அவ்வளவு சீக்கிரத்தில் நாம் எமது போராட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியும். மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் எவ்வித உதவியுமின்றி ஒரு இன அழிப்பு யுத்தத்தை நாம் தனித்து நின்று முகங்கொடுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் உலகத்தமிழினத்தின்  உதவியையும், ஆதரவையும்,நாம் வேண்டிநிற்கின்றோம். குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் எமது உரிமைப்போருக்குக் குரல் கொடுப்பதுடன் தம்மாலான உதவிகளையும் செய்யுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன் - தமிழீழத் தேசியத்தலைவர் - 24 வருடங்களுக்கு முன்னர் கூறியது இன்றும் என்றும் மிகவும் அவசியமான வார்த்தைகளாகும். அந்த காலகட்டத்தில் தான் எம்மை வரலாறு கொண்டு வந்து விட்டிருக்கின்றது.

அந்த வகையில்தான் தமிழினத்தின் அனைத்து வல்லமைகளிலும் தமிழ் இளையவர்களின் பங்கு மிகப்பெரியதாகின்றது. இளையவர்களிடம் அந்த தாகம் இருக்கின்றதையும் அதனை பெரியவர்களும் பெற்றவர்களும் தான் வழிகாட்டி செல்ல வைக்க வேண்டும் என்பதை பிரான்சில் பாரிசில் கடந்த  28.08.2019  புதன்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழீழ மக்கள் பேரவை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாட்டில் மனிதநேயப்பணியாளர் சனநாயகப்போராளிகள் மேற்கொண்ட நீதிக்கான நடைபயணப்போராட்டமும், வழியெங்கினும் பெற்ற அனுபவங்களும் ஆங்காங்கே வாழும் தமிழ்மக்களும் இளையவர்களும் எவ்வாறான மனநிலைப்பாட்டில் வாழ்கின்றார்கள் என்பதை நேரடியாக காணக்கூடியதாகவும் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.

இன்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய இளையவர்கள் அரசியலிலும், ஐ நா மனிதவுரிமை மையங்களிலும் பங்கு கொண்டு தமதினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகேட்டு நிற்கின்றனர். தமிழீழத்தின் பிரச்சனையானது மனிதவுரிமைகள் மையம் எடுக்கும் முடிவுக்கும் அப்பால் சென்றுள்ளது எனவே எமது இளையவர்களும் தாம் வாழும் நாடுகளில் அந்தந்த நாட்டையும் அதன் ஊடாக அவற்றின் உறவுகளை பலப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பாராளுமன்றம் போன்றவற்றில் எமது விடயம் பேசப்பட வைக்கவேண்டும். ஒவ்வொரு நாடுகளிலும் அரசியலில் அங்கம் வகிக்க வேண்டும். அதனூடக எமது விடயம் கொண்டு செல்லப்பட வேண்டும்  தேசியத்தலைவர் நம்பிக்கையோடு எதிர்பார்த்த விடயத்தை நிறைவேற்றுவோம் என்ற உறுதிப்பாட்டை தனது இன்னுயிரை தனது மக்களுக்காக 12 நாட்கள் நீர்கூட அருந்தாது தன்னை உருக்கி உயிர் ஈந்த தியாகதீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.

''தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்''

பரப்புரை
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 
பிரான்சு

No comments