காணி விடுவிப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முப்படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று  யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துகொண்டிருந்தார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், இரானுவம், பொலிஸார், கடற்படையினர் அரசஅதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது யாழ் மாவட்டத்தில் முப்படைகளின் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் குறித்தும் விடுவிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments