5-ஜி கோபுரத்துக்கு மன்னாரில் கடும் எதிர்ப்பு


மன்னார் - பள்ளிமுனையில் 5-ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பள்ளிமுனை கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் இரவோடு இரவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதனால். அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சினால் சரும நோய்கள் உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக குற்றம்சுமத்தியே பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதேநேரம், குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அதிகாரசபையின் அனுமதியோ அல்லது பிரதேசவாசிகளின் அனுமதியோ பெறப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்கும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி பள்ளிமுனை கிராம மக்கள் இன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

No comments