கைவிரித்த மைதிரிக்கு, கருத்துச் சொன்ன கனிமொழி!

தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் திமுக கனிமொழி எம்பி தலமையிலான குழுவினர் இலங்கை அதிபர் மைதிரிபால சிறிசேனவை ரவூவ்ஹக்கீமின் மகளின் திருமணத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சிறுபான்மை இனத்தவர்களாக இருக்கும் தமிழ் முஸ்லிம் மக்கள் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

மைதிரி.."தமிழ் - முஸ்லிம் மக்கள் வழங்கிய அமோக வாக்குகள் எனது வெற்றிக்கு வழிசமைத்தது. எனது ஆட்சியில் நாட்டுக்கு நன்மை பயக்கும் பல விடயங்களைத் தற்துணிவுடன் முன்னெடுத்தேன். ஆனால், சிறுபான்மை இனத்தவர்களின் நலன் சார்ந்த முக்கிய விடயங்களை என்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. நாடாளுமன்றம் எனக்குரிய பல அதிகாரங்களைப் பறித்தெடுத்தமையே இதற்குக் காரணம்." என தெரிவித்தார்.

இதற்கு ஆலோசனை தோரணையில் விளக்கம் கொடுத்த கனிமொழி "இலங்கையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித துன்புறுத்தலும் இன்றி சுதந்திரமாக வாழ வேண்டும். கடந்த காலங்களில் அவர்கள் சொல்லணாத் துயரங்களை அனுபவித்தார்கள். அந்த நிலைமை இங்கு மீண்டும் ஏற்படக்கூடாது. இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக தமிழ் - முஸ்லிம் மக்கள் உள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தமிழ் - முஸ்லிம் மக்களின் வாக்குகள்தான் தீர்மானிக்கின்றன. இம்முறையும் அதேதான் நடக்கும்" என்று கூறியுள்ளாதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments