கோத்தாவிற்கு சிறையில் ஜம்பராம்?


அடுத்த அரசாங்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஜம்பர் அணிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதாரண கூறுவதாயின், கடந்த நான்கரை வருடங்கள் இருந்தும் அதனைச் செய்ய முடியாமல் போனது ஏன்? என தென் இலங்கையின் பிரதான சங்க சபையின் தலைவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மத்திய சபை உறுப்பினருமான கலாநிதி ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கரை வருடமும் திருடர்களுக்கு ஜம்பர அணிவிப்பது எப்படிப் போனாலும், நாட்டு மக்களுக்கு மட்டும் ஜம்பரை அணிவித்தார்கள் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு திருடர்களுக்கு ஜம்பர் அணிவிப்பதாக தெரிவித்தே ஆட்சிக்கு வந்ததாகவும், இருப்பினும், அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு திருடர்களைப் பிடிக்கும் போர்வையில் அவர்கள் திருடியதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பழைய தட்டை சூடேற்றி (புதிய ரொட்டி சுட) அரசியல்வாதிகள் செய்யும் போலியான நடவடிக்கைகள் குறித்து மக்கள் நன்கு அறிந்தே வைத்துள்ளதாகவும், அவர்கள் பழைய மாட்டை விற்பனை செய்துள்ளதாகவும் சோபித்த தேரர் மேலும் கூறியுள்ளார்.

No comments