யாழ்வருகின்றார் பாலித பெரும?


சமூக செயற்பாட்டாளர் கணேஸ் வேலாயுதத்தின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும யாழ்.மாவட்டத்திற்கு அடுத்த மாதம் வருகை தரவுள்ளார்.
இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணைந்து, புரிந்துணர்வுடன் பயணிப்பார்களாக இருந்தால் நிச்சயம் சஜித் வெற்றிபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பளாராக சஜித் பிரேமதாசவை பிரதமர் பிரேரித்துள்ளார். இது சிறந்த தீர்மானம். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இந்த நாட்டில் மறுக்க முடியாத ஒரு தலைவர். அவர் கட்சியின் தலைவர். அவர் பல தடவைகள் இந்நாட்டில் பிரதமராக பதவி வகித்தவர்.
கோட்டாபய ராஜபக்ஸவுக்கு சிங்கள, பௌத்த மக்களின் வாக்குகள் மாத்திரமே உள்ளன. இருப்பினும், சஜித் பிரேமதாசவுக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மக்களின் வாக்குகள் காணப்படுகின்றன.
இத்தருணத்தில் ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் பரஸ்பரம் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு செயற்பட வேண்டும். இவர்கள் எவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments