கலகலக்கின்றது கொழும்பு அரசியல்?

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸநாயக்கவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய இடதுசாரி முன்னணி தீர்மானித்துள்ளது.
கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகித்து வருகின்றது.
இந்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்காரணமாக ஐக்கிய இடதுசாரி முன்னணி, ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.
மிகஉயர்ந்த பதவியை வகிக்கும் அளவிற்கு, அரசியல் ரீதியாக, சஜித் பிரேமதாஸ முதிர்ச்சியடையவில்லை என ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தேர்தலில் சஜித் பிரேமதாசவை நிறுத்த முடிவெடுக்கப்பட்ட அன்றே ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய இடதுசாரி முன்னணியின் நிறைவேற்றுக் குழுவின் 27 உறப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கத்துடன் தமது கட்சி விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திடவுள்ளதாகவும் ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்தியகுழு உறுப்பினர் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments