வலைத்தள தவறான பிரச்சாரம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது: ஹூல்


"சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தேர்தல் தொடர்பான தவறான கருத்துக்கள், தகவல்கள், இனவாத பிரசாரங்கள் ஆகியனவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை. அச்சு ஊடகங்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்"

இவ்வாறு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்ன ஜீவன் ஹூல் தெரவித்தார்.

மேலும் தெரிவித்ததாவது,

சமூக வலைத்தளங்கள் குறிப்பாக முகநூல், டுவிடர், யு டிவூப், மின்னஞ்சல் ஆகிவற்றின் ஊடாக தகவல்கள், கருத்துக்கள், இனவாத பேச்சுகள் அகிவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை.

இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அவர்கள் எம்முடன் இணக்கப்பாடுடன் செயற்பட்டு வருகிறார்கள்.

தேர்தல் கால குற்றங்கள் தொடர்பாக ஆராய 5 பேரை கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளோம். மாவட்ட ரீதியில் இவ்வாறான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் 3 பேர் அங்கம் விகிப்பர்.

மாவட்ட குழுக்களினால் தேர்தல் வன்முறை சம்வங்கள் குறித்து 5 பேர் கொண்ட குழுவினரிடம் அறிவிப்பார்கள். அவர்கள் இது தொடர்பாக முறையாக விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார்.

No comments