இப்போது சொல்லுங்கள்? நம்ம பாராளுமன்றஉறுப்பினர்களுக்கு பதவி ஏன்? - செவ்வேள்

முல்லையில் இன்று பெரும் மக்கள் போராட்டம்!

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு வருடங்களாக தமக்கு வாக்களித்த மக்களுக்குப் பெற்றுக் கொடுத்தவை...

1. மணலாறு, வவுனியா, மட்டக்களப்பு ,நாவற்குழி, திருகோணமலை உட்பட்டபல பகுதிகளில் சிங்கள குடியேற்றங்கள் விஸ்தரிக்க பட்டு இருக்கிறது. 117.1 சதுர கி.மீ.பரப்பளவிலிருந்த வெலிஓயா தற்போது, 164.2 சதுர கி.மீ. பரப்பளவில் வெறும் சிங்கள பிரிவாக விஸ்தீரணமாகி இருக்கிறது

2. நூற்றுக்கணக்கான விகாரைகள் (அண்ணளவாக 107) சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருக்கிறது

3. சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான தென்பகுதி சிங்களவர்கள் வடக்கு கிழக்கு அரச நிறுவனங்களில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்

4. இலங்கை கணக்காளர் சேவை , கிழக்கு முகாமைத்துவ உதவியாளர் சேவை போன்ற போட்டி பரீட்சைகளில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்

5. சிறைகளில் தமிழர்கள் இன்றைக்குக்கும் அரசியல் கைதிகளாக இருக்கிறார்கள் .இந்த அரசாங்கம் அவர்களை அரசியல் கைதிகளாக கூட ஏற்று கொள்ள மறுக்கிறது

6. காணமல் போனோர் உறவுகள் ஆண்டுக்கணக்கான வீதிகளில் நிற்கிறார்கள்

7. மகாவலி திணைக்களம் , வனவளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் என மத்திய அரச நிறுவனங்கள் போட்டி போட்டி தமிழர் நிலத்தை அபகரிக்கும் நிலை இருக்கிறது .விவசாய நிலங்கள் , மேய்ச்சல் தரைகள், வழிபாட்டு நிலங்கள் கூட பறிக்கப்பட்டு இருக்கிறது

8. வவுனியா வர்த்தக வலயத்தை கூட பெற்று கொடுக்க முடியவில்லை .கிளிநொச்சியில் சட்டவிரோதமாக தென்னிலங்கை வர்த்தகர்களுக்கு உப்பளங்களை அரசாங்கம் பெற்று கொடுக்கிறது

9. வடக்கில் எல்லா அரசாங்க பண்ணைகளும் இலங்கை ராணுவத்தின் பண்ணைகளாக இன்னும் இருக்கின்றன

9. சர்வதேச விசாரணையை நீர்த்து போக செய்து இருக்கிறது .போர்குற்றவாளிகளை காப்பாற்றி அடைக்கலம் கொடுத்து இருக்கிறது

10. வடக்கு கிழக்கை பொறுத்தவரை வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருக்கிறது வட மாகா­ணத்தின் வேலை­யின்மை வீத­மா­னது 7.7 வீத­மாக உள்­ளது.எந்த நடவடிக்கையும் இல்லை

11.முல்லைத்தீவு ஒட்டு தொழில்சாலை , பரந்தன் இரசாயன தொழில்சாலை , வாழைச்சேனை கடதாசி தொழிற்ச்சாலை என தொழில்துறையில் முழுமையாக இயக்கப்பட வேண்டிய /உருவாக்கப்பட வேண்டிய நிறுவனங்கள் எவையும் கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்க படவில்லை .இவற்றை மீள் இயக்குவதற்கு அரசாங்கமே தடையாக இருக்கிறது

12. உலகப்பிரசித்தி பெற்ற மீன்பிடி மேடை (Petro bank) எங்களுடைய கையில் தான் இருக்கின்றது.ஆனால் இந்த கடல்வளத்தை தென்னிலங்கை மீனவர்களுக்கு பெற்று கொடுக்கிறது அரசாங்கம் .நாயாறு ,சாலை உட்பட பலபகுதிகளில் கடல் அட்டை தொழில் முற்றுமுழுதாக தென்னிலங்கைக்கு பெற்று கொடுக்க பட்டு இருக்கிறது

13.63 ஆயிரத்து 345 குடும்பங்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களாக வட மாகாணத்தில் வாழ்கின்றனர் .40 ஆயிரம் பெண் தலைமைக் குடும்பங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றன.இதுவரை எந்த வாழ்வாதாரங்களும் பெற்று கொடுக்கப்படவில்லை

14. ஒருமித்த நாடு , பௌத்த முன்னுரிமை என அரசியல் யாப்பு ஆக்க விடயத்தில் பொய்களுக்கு மேலாக பொய் சொல்லி ஏமாற்றி இருக்கிறார்கள்

15. கல்முனைக்கு கூட ஒரு கணக்காளரை நியமிக்க மறுத்து இருக்கிறார்கள்

இப்போது சொல்லுங்கள் ? நம்ம பாராளமன்ற உறுப்பினர்களுக்கு பதவி ஏன் ?

No comments