கோத்தாவின் வழக்கை மேன் முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது


அவன்காட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாயப ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

அவன்காட்  வழக்கில் இருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது.

எனினும், அது தொடர்பான ஆவணங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதால் இந்த வழக்கு ஒத்திவைக்கபடுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments