இங்கிலாந்தில் நொருக்குத் தீனியால் பார்வையிழந்த சிறுவன்!!


நொருக்குத் தீனியான பொற்றற்றோ சிப்ஸை (Potato Chip)  நீண்ட வருடங்களாகச் சாப்பிட்டதால் சிறுவன் ஒருவன் தனது கண் பார்வையை இழந்துள்ளார்.

17 வயதுடைய இங்கிலாந்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் கண் பார்வை மிக மோசமடைந்த  நிலையில் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு மருத்துவ நிபுணர்களால் சிகிற்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

விற்றமின் பி12, விற்றமின் டி போன்ற ஊட்டச் சத்துக்கள் இளைஞனின் உடலில் போதுமானது இல்லை என மருத்துவ பரிசோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிறுவன் பொற்ரற்றோ சிப்ஸ், பாண், மாற்றும் இறைச்சிகளை மட்டுமே உண்டு வந்துள்ளார். அவர் காய்கறிகள் மற்றும் பழங்களை அவர் உண்ணவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இதனால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படைந்து தற்போது பார்வை மற்றம் செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளன என அனல்ஸ் ஒவ் இன்ரேனல் மெடிசின் (Annals of Internal Medicine) என்ற மருத்து சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments