இராணுவ வீரர் துப்பாக்கி சூட்டு காயத்துடன் வைத்தியசாலையில்

பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவத்தில் நிசாந்த (21) என்ற சிப்பாயே படுகாயமடைந்தவராவார்

No comments