வெள்ளத்தால் 1475 குடும்பங்கள் பாதிப்பு


காலி, மாத்தறை மாவட்டங்களில் வெள்ளத்தினால் இதுவரை 1475 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் 12 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன. ஒருவர் பலியானதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments