பதாகைகளை ஒழித்துவைத்த கூட்டமைப்பு?


முல்லைதீவில் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கூட்டமைப்பின் மீதான மக்களது சீற்றம் அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தது.பேரணியில் கலந்து கொண்டவர்கள் எடுத்து செல்ல தயாரிக்கப்பட்ட பதாகைகளில் கூட்டமைப்பினை கடமையாக விமர்சித்து கோசங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனை அவதானித்த து.ரவிகரன் உள்ளிட்ட சிலர் குறித்த பதாகைகளை ஒழித்து வைக்க முற்பட்டதாக தெரியவருகின்றது.

எனினும் அதனை தாண்டி மக்கள் தமது கைகளில் கூட்டமைப்பினை விமர்சிக்கும் சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.

இதனிடையே இன்று முல்லைதீவில் பேரணியில் முன்வரிசையில் நின்று புகைப்படங்களிற்கு போஸ் கொடுக்க முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பின்னாலே விரட்டியடிக்கப்பட்டிருந்தார்.

No comments