கடையடைக்க முடியாது; புதுக்குடியிருப்பு வணிகர் கழம் அறிவித்தது

16ம் திகதி கடைகளை அடைக்க முடியாது என்றும், வழமை போன்று கடைகள் இயங்கும் எனவும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு வர்த்தக வணிகர் கழகம் இன்று (14) மாலை அறிவித்துள்ளது.

16ம் திகதி எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இந் நிலையில் கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பிலேயே புதுக்குடியிருப்பு வர்த்தக வணிகர் கழம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும்,

சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமையில் கடையடைப்பு விடுக்கப்பட்டால் எம்மால் ஆதரவு வழங்க முடியாது. இப்படியான அழைப்பு விடுக்க முன்னர் அமைப்புக்கள் எம்முடன் பேசி எமது கோரிக்கைகள், நிலைப்பாட்டை அறிந்து செயற்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments