சுதேச மக்கள் கட்சியும் ஆதரவு!


பண்டை புகழ் கொண்ட ஒரு சுதேச இனம் இன்று  தனது இருப்பினைத் தக்கவைக்க  நித்தம் நித்தம் போராடிக் கொண்டிருக்கின்றது.தமிழர்களாகிய நாம் எமது  ஒற்றுமையை உலகிற்கும் ஆட்சியாளர்களிற்கும் காட்டவேண்டிய கடப்பாட்டிற்குள் இருக்கின்றோம். யுத்தத்தின் வலி, வேதனைகளை இன்னமும் தமது உடல்களிலும், மனங்களிலும் ஆறாத வடுவாய் தமிழர் சுமந்து வருகின்றனர். ஒரு தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கையை உலகிற்குப் பறைசாற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழனினதும் தலையாய கடமை. எனவே, அரசியல், மத, இன பேதங்களை மறந்து  எமது உரிமையை நிலைநாட்ட அலைகடல் என திரண்டு வாரீர் என சுதேச மக்கள் கட்சி அழைப்புவிடுத்துள்ளது.

சுதேசமக்கள் கட்சியினராகிய நாம் எழுக தமிழிற்குப் பூரண ஆதரவினை வழங்குகின்றோம். எமது இளைஞர்களும், மக்களும் அதனையே விரும்புகின்றனர். எனவே, எழுக தமிழ் எமது போராட்ட வரலாற்றின் மைல்கல்லாக அமையும். இந்த வரலாற்று சம்பவத்தில் அனைவரும் தவறாது கலந்துகொள்வோம்.வீழாது எங்கள் வீரம் ஓயாது எங்கள் தாகம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் மதிராஜ் தெரிவித்துள்ளார்.

No comments