காஷ்மீர் நில அதிர்வில் நால்வர் பலி!

பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் இன்று (24) மாலை இடம்பெற்ற நில அதிர்வில் நால்வர் பலியாகியுள்ளனர்.

5.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த இந்த நில அதிர்வில் வீதிகள் இரண்டாகப் பிளந்து பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நில அதிர்வில் நால்வர் பலியான நிலையில் மேலும் 50 பேர் காயடைந்துள்ளனர் என்று மிர்பூர் மாவட்ட பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments