பாரவூர்த்தியுடன் மோதிய பேருந்து; 36 பேர் உயிரிழப்பு!

சீனாவில்  பேருந்து ஒன்றுடன்  நெடுஞ்சாலையில்  பயணித்த பாரவூர்தி   மோதிய விபத்தில்  36 பேர் வரை இறந்துவிட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாக சீன உடகங்கள்  தெரிவிக்கின்றன.

சீனாவில் சாலை விபத்துகள் நடப்பது சர்வசாதாரணம் என்ற நிலை உள்ளது. ஒரு புள்ளிவிபரத்தின்படி, கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் சீனாவில் சாலை விபத்துக்களால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 58,000 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோர விபத்து நடந்த இடம் கிழக்கு ஜியாங்சு மாகாணம். அங்குள்ள கடுகதி  நெடுஞ்சாலையில் சுமார் 69 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து ச‍ென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிரே வந்த பாரவூர்தி மீது பேருந்து பயங்கரமாக மோதியதில் 36 பேர் வரை அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்தின் டயர் வெடித்ததால், நிலைதடுமாறிய பேருந்து லாரியின் மீது மோதிவிட்டதாக கூறப்படுகிறது.

No comments