தமிழகம் வருகிறது விண்வெளி ஏவுதளம்!

தமிழகத்தில்  இந்திய விண்வெளி ஆராட்சி நிறுவனத்தின் (ஸ்ரோ) ஏவுதளம் அமைக்க நிலம் வழங்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் துத்துக்குடியில் இஸ்ரோ ஏவுதளம் அமைக்க நிலம் வழங்கி முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டு வருகிறார் எனவும் உதயகுமார் தெரிவித்துள்ளார். தென் தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையான விண்வெளி ஏவுதள கோரிக்கைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி  பச்சை கொடி அசைத்திருப்பது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments