கூட்டமைப்பை தோய்த்து தொங்கவிட்ட முல்லை இளைஞர்கள்!


நீராவியடி பிரச்சினையின் போது பதுங்கியிருந்து விட்டு இன்று முல்லைதீவு சென்ற சுமந்திரன் அணியை உண்டு இல்லையென ஒருபிடிபிடித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

இன்றைய தினம் முல்லைதீவிற்கு விஜயம் செய்த சுமந்திரன் தன்னுடன் சிவமோகன்,சாந்தி சிறீஸ்கந்தராசாவையும் துணைக்கு இழுத்து சென்றிருந்தார்.

எனினும் அவர்களை சுற்றிவளைத்துக்கொண்ட தமிழர் மரபுரிமையினர் மற்றும் இளைஞர்கள் உண்டு இல்லையென கிழித்து தொங்கவிட்டிருந்தனர்.
வுழமையாக சால்ஜாப்புக்களை சொல்லி தப்பித்துக்கொள்ளும் சுமந்திரன் கூட ஒரு கட்டத்தில் முடியாமல் கையறு நிலையில் மௌனமானதாக தெரியவருகின்றது.

இந்த அரசிற்கு முண்டு கொடுத்து எதனை சாதித்தீர்கள் என இளைஞர்கள் கேள்வியால் துளைக்க கடைசியில் மௌனமே கூட்டமைப்பிடம் எஞ்சியிருந்துள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் இடம்பெற்ற குழப்பங்களின் போது சாந்தி சிறீஸ்கந்தராசா தவிர ஏனையவர்கள் பதுங்கிக்கொண்டமை தெரிந்ததே. 

No comments