மாற்றுச் சக்தி நான் - மகேஸ் சேனநாயக்க

நாட்டின் மற்றுச் சக்தி நான் என்று நம்புவதாக முன்னாள் இராணுவ தளபதியும், தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட போது உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார்.

மேலும்,

அரசியல்வாதிகள் அல்லாத புத்துஜீவிகள் குழுவுடன் நான் இணைந்திருக்கிறேன். நான் திருடர்கள் மற்றும் மோசடியாளர்களினால் ஆட்கொள்ளப்படவில்லை. நாட்டை உண்மையாக நேசிக்கும் மக்களினால் சூழப்பட்டிருக்கிறேன்.

இலங்கைக்கு ஒரு மாற்றுச் சக்தி தேவை அந்த மாற்றுச் சக்தி நான் என்று நம்புகிறேன்.

ஒரு சுயாதீனமான, பக்கச்சார்பற்ற அரச தலைவரின் ஆட்சியில் மட்டுமே இந்நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் இருக்கும்.

இந்நாடு சுயாதீனமான, கௌரவமான மற்றும் சீரமைக்கப்படாத கொள்கையை பின்பற்ற வேண்டும். நாங்கள் இந்நாட்டில் ஏற்றுமாதி சார்ந்த பொருளாதார அபிவிருத்தியை செயற்படுத்துவோம்.

நான் இராணுவத்தில் இருந்து நாட்டுக்கு சிறப்பாக பணியாற்றினேன். ஆனால் நாடு மேலும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய தேவை இருந்தது. அரசியல்வாதிகள் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படைகளுக்குள் செல்வாக்கு செலுத்தினர். அந்த நிலை மாற வேண்டும். என்றார்.

No comments