தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு பிரித்தானியா

இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியை பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியற் பிரிவு செயற்பாட்டாளர் திரு. செல்வா அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வு ஆரம்பமானது. தொடர்ந்து
19-03-1991 இல் மன்னார் சிலாபத்துறையில் நடைபெற்ற சமரில் வீரச்சாவடைந்த லெப். குட்டி அவர்களின் தாயார் திருமதி ரீற்ரா இராசநாயகம் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.


அகவணக்கத்தைத் தொடர்ந்து முன்னாள் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் திரு. சிறீ அவர்களால் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் , கேணல் சங்கர், லெப் கேணல் ராயு ஆகியோரின் இணைந்த திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணியப்பட்டு மலர் வணக்கம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழீழ எழுச்சிப் பாடல்கள் , எழுச்சிக் கவிதைகள், நினைவுரை, சிறப்புரை, எழுச்சி நடனம் இடம்பெற்று இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற எழுச்சிப் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி கை ஏந்தல் நிகழ்வு நடைபெற்று நிறைவு பெற்றது.

No comments