முரளி பாய்ந்தார்:துரதிஸ்டமென்கிறது தெற்கு?


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கோத்தபாய பக்கம் பாய்ந்துள்ளார்.ஏற்கனவே நெருங்கிய உறவுகளை மகிந்த தரப்புடன் கொண்டிருப்பதாக கூறப்பட்டுவந்திருந்த நிலையில் இன்று அவர் பகிரங்கமாக கோத்தபாய பக்கம் சென்றடைந்துள்ளார்.

இதனிடையே விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட 2009 மே18ம் திகதியே தனது வாழ்வில் ஒரு பொன்னாள் என கோத்தபாய பங்கெடுத்த நிகழ்வொன்றில் பகிரங்கமாக முரளிதரன் தெரிவித்துள்ள கருத்து அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.


இதனிடையே சுதந்திரக்கட்சியுடனான இணக்கமின்மை ,அதிகரித்து வரும் சஜித் ஆதரவு வீச்சு என்பவற்றின் மத்தியில் கோத்தாவிற்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்ட கட்அவுட் சரிந்து விழுந்து பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.இச்சம்பவர் தென்னிலங்கை சிங்கள மக்களிடையே துரதிஸ்டமான சம்பவமென சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

No comments