சட்டத்தரணிகள் புறக்கணிப்பு:முல்லையில் பேரணி!


முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் தங்கியிருந்த பிக்குவின் சடலம் நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி ஆலய சூழலில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் புனிதத்தை காக்க பாடுபட்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,அறங்காவல் சபையினர் தாக்கப்பட்டமையினை கண்டித்து நாளை போராட்டங்களிற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

வுடமாகாணம் தழுவிய வகையில் சட்டத்தரணிகள் நாளை நீதிமன்ற அமர்வுகளை புறக்கணிக்கவுள்ள நிலையில் கவனயீர்ப்பு பேரணியொன்றும் முல்லைதீவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

வர்த்தக சங்கம்,பொது அமைப்புக்கள் உள்ளிட்டவை இணைந்து முன்னெடுக்கும் பேரணி பழைய வைத்தியசாலை முன்னதாக புறப்பட்டு நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்து பின்னராக மாவட்ட செயலகத்தில் முடிவடையவுள்ளது.

நீராவிப் பிள்ளையார் ஆலயச் சூழலில் தங்கியிருந்த பௌத்த பிக்கு உயிரிழந்த நிலையில் துறவியின் இறுதி திகழ்வுகள் நேற்று இடம்பெற இருந்த நிலையில் நீதிமன்றினால் இன்றுவரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பௌத்த துறவியின் சடலம் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த  நிலையில் நீதிமன்றம் அருகாக கடற்கரையோரம் அமைந்துள்ள கடற்படை  தளத்தில் இறுதி கிரிஜைகளை நடத்த உத்தரவிட்டிருந்தது.

எனினும் நீதிமன்ற உத்தரவு புறந்தளப்பட்டு அருகாகவுள்ள ஆலய தீர்த்தக்கேணியில் பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

No comments