சவேந்திரா நியமனம் தமிழ் மக்களின் முகத்திலடி!


முக்கியமானயுத்தக்குற்றவாளிஎனஅடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா என்பவரை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக்கியுள்ளதனை ஜநாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடுகளின் மனித உரிமைகள் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ச்சியானதும் விரிவாக ஆராயப்பட்டும் அறிக்கையிடப்படுகின்றது என்ற வகையில் இந்த பூகோள காலமீளாய்வு அறிக்கையிடல் என்பது உண்மையில் மிகப் பெறுமதியானதும் செயற்திறன் மிக்கதுமாகும்.

2012 இல் இருந்து,நாடுகளின் பெயர் குறித்தான விசேட,பிரத்தியேக அறிக்கைகள் வெளிவருகின்றது என்ற பின்னணியில்  சிறீலங்கா போன்ற  நாடுகளை பொறுத்தவரையில், இந்த பூகோளகால மீளாய்வு அறிக்கை என்பது இது மிக முக்கியமானதொன்றாகும். 

2017 நவம்பரில் நடந்த சிறீலங்கா மீதான பூகோளகால மீளாய்வு அறிக்கையின் போது சிறிலங்கா மீதான இவ்வறிக்கையின் வெளிப்பாடுகளை கவனத்தில் கொள்வதோடு மேலதிகமாக சிறீலங்காவினாலேயே இணை அனுசரணை வழங்கப்பட்ட சிறிலங்கா மீதான மனித உரிமைகள் பேரவையின் 30-1 அறிக்கையின் கடப்பாடுகளையும் மீளஉறுதிப்ப்படுத்த வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியிருந்தன.

இந்த மனிதஉரிமை பேரவையுடனானதும்,குறிப்பாக மனிதஉரிமைகள் பேரவையின் பூகோளகால மீளாய்வு அறிக்கையுடனானதுமான சிறீலங்காவின் ஊடாட்டமானது,உண்மையாகவே மனப்பூர்வமானதா அல்லது பெறுமான ஒரு தொடர்பாடல் உத்தியாக,அட்டவணையினை பூர்த்திசெய்ய சாட்டுக்குச் செய்யப்படும் ஒருநடவடிக்கையா என்பதே தற்போதய நிலையில் இங்கு எழுகின்ற மிகமுக்கியமான கேள்வியாகும்.

2018 செப்ரெம்பர் 14 ஆம் திகதி நடந்த சிறீலங்காவின் அமைச்சரவையின் விசேட கூட்டத்தினை தலைமையேற்று நடாத்திய ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன அவர்கள்,எந்தவொரு இராணுவ உயர் அதிகாரியையும் விசாரணையின் பொருட்டு தடுப்புக்காவலுக்கு உள்ளாக்கவோ அல்லது சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கவோ முடியாதென்கிற தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தார்.

அதுமட்டுமன்றி இன்று சிறிலங்கா அரசானது அதைவிட பலபடிகள் மேலே சென்று, இதே மனிதஉரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தால் நடாத்தப்பட்ட சிறீலங்கா மீதான அலுவலகவிசாரணையின் அறிக்கையின் பிரகாரம் முக்கியமான யுத்தக்குற்றவாளிஎனஅடையாளம் காட்டப்பட்ட சவேந்திரசில்வா என்பவரை சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக்கியுள்ளது.

இந்நியமனமானது இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் முகத்தில் விழுந்த அறை என்பதோடு,மிகத்தெளிவாக, திட்டமிட்டரீதியில் வேண்டுமென்றே இந்த சபையின் சட்டபூர்வத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவேகொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




No comments