ஐரோப்பாவில் அங்கீகரிக்காத ஆச்சி மசாலா கேரளாவிலும் தடை!

பிரபல மசாலா தூள்  நிறுவனமான ஆச்சி மசாலா மிளகாய் தூள், மல்லி தூள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது.
இந்த நிலையில் திருச்சூரில் உள்ள ஒரு கடையில் ஆச்சி மசாலா நிறுவனத்தின் மசாலா பொருட்களை கைப்பற்றிய கேரள உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கொச்சியில் உள்ள உணவுப் பொருட்கள் பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைத்தனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஆச்சி நிறுவனத்தின் மிளகாய்ப் பொடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளான இட்டியோன், புரோனோபோஸ் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை கேரள உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து, ஆச்சி மசாலா நிறுவனத்தின் மிளகாய் பொடிக்கு தடை விதித்து கேரள உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பூச்சிக்கொல்லியான புரோனோபோஸினால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகாரம் தரவில்லை. மேலும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதனை தடை செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. புரோனோபோஸினால் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. இதனை பயன்படுத்துவதால் மூச்சடைப்பு, தலைசுற்றல், குமட்டல், ஆகியவை ஏற்படலாம். மேலும், நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இறப்பைக் கூட உண்டாக்கலாம் என்று கூறுகிறார்கள் சூழலியலாளர்கள்.

No comments