இரண்டு அத்தியவசிய உணவு பொருளின் விலை அதிரடி உயர்வு

பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரித்துள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி 1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரிமா நிறுவனம் நுகர்வோர் சேவைகள் அதிகார சபையின் அனுமதி இன்றி குறித்த விலை அதிகரிப்பை செய்துள்ளமையினால், நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments