தேர்தலிற்கு தயாராகும் தேர்தல் திணைக்களம்?


அடுத்து என்ன தேர்தல் நடைபெறப்போகின்றது என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை தொடர்கின்ற நிலையில் இலங்கை தேர்தல் திணைக்களம் தேர்தல் பணிகளில் மும்முரமாகியிருக்கின்றது.

இதன் பிரகாரம் இன்றைய தினம் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்கள் பெயர்விபரங்களை பதிவு செய்ய கோரி அரச திணைக்களங்களிற்கு சுற்றுநிரூபங்கள் தேர்தல் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் ஒக்டோபர் 4ம் திகதியினுள் இது தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்க கோரியே இச்சுற்றுநிரூபம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ஏதிர்வரும் டிசெம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலா அல்லது மாகாணசபை தேர்தலா நடக்குமென்பதில் இதுவரை தெளிவான நிலைப்பாடு வெளியிடப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments