ஒரிரு நாளில் ஜதேக சுபமுகூர்த்தமாம்?


சுபநேரம் ஓரிரு தினங்களிலேயே வரும் எனவும், அதன்போது வேட்பாளரை நாம் நியமிப்போம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
கினிகத்தேனை பிரதேசத்திலுள்ள வீதியொன்றை செப்பணிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று (29) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமிப்பதில் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தாம்  வேட்பாளராக வர வேண்டும் என கட்சியை சார்ந்த ஐவர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் எவரை ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விரும்புகின்றார்களோ அவரை வேட்பாளராக கட்சி நிறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டை பொறுப்பேற்ற பின் இதுவரை 6,500 கோடி ரூபாய் கடன் செலுத்தப்பட்டுள்ளது.  இதில் 4000 கோடி ரூபாய் கடன் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அவர்கள் முன்னெடுத்த பணிகளுக்காக பெறப்பட்டவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments