ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையில் இனி முக்காடு போடலாம்!

முஸ்லீம் பெண்கள் அணியக்கூடிய முக்காடு, ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் அதிகாரப்பூர்வ சீருடையின் ஒரு பகுதியாக மாறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்மூலம், ஸ்காட்லாந்து காவல்துறையின் பன்முகத்தன்மை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பானது, முஸ்லீம் பெண்கள் ஸ்காட்லாந்து காவல்துறை பணியில் சேர உற்சாகப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்காடு விவகாரத்தால் பல முஸ்லீம் பெண்கள் அப்பணியில் சேர்வதை கடந்த காலங்களில் தவிர்த்து வந்தனர் என்று கூறப்படுகிறது. கடந்த காலங்களில், ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையில் பணிபுரியும் முஸ்லீம் பெண் அதிகாரிகள், தங்களுடைய உயரதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே முக்காடு அணியமுடியும் என்ற நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments