ஐ அம் வெய்டிங்' விஜய் போல் காத்திருக்கும் சீமான்!


தமிழக அரசியலில் சுவர்ஸ்ஸம் குறைந்துவிட்டதாகவும் ரஜனிகாந்த் வரட்டும் அவர் வருகைக்ககதான் காத்திருக்கேன் ,அப்போ சூடு பிடிக்கும் என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் மகளிர் பாசறை சார்பாக காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், சுங்குவார் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற வணக்க நிகழ்வில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் சீமான் பேசியதன் முக்கிய பகுதி ;
தொலைக்காட்சியை திருப்பினால் அத்தி வரதர். கடைசியா நயன்தாராவும், ரஜினியும் குட்பாய் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். அவர் இவ்வளவு நாள் எவ்வளவு பெருமைக்குரியவராக இருந்தாரோ அவ்வளவும் சிறுமைப்படுத்தி ஆக்கிட்டீங்களே.. கொடுமை!
வெங்கடாஜலபதிக்கு மார்கெட் போச்சு.. 48 நாள்ல அத நம்ம ஆளு அடிச்சிட்டாருன்னு சொன்னாங்க. ரஜினிகாந்தை வீழ்த்தி தம்பி விஜய் வர்றது மாதிரி அது ஒரு பெருமைதான் நமக்கு.. டேய் காஞ்சிபுரத்துல நம்மாளுக்கு கூட்டம்.. விடுடா விடுடான்னு அது ஒரு பெருமை.
எடப்பாடியை பேசி ஸ்டாலினால் ஒன்னும் சோபிக்க முடியல. ஏன்னா அவரே ஒரு புள்ளைபூச்சியா இருக்காரு. இந்த நேரத்துல தமிழ்நாட்டுல ஒரு ஷோ மேச் நடக்குது. ஒரு டம்மி.. ஒருவேளை ஐயா ரஜினிகாந்த் வந்தால், சூடு பிடிக்கும் ஆட்டம். சரி.. வா மோதலாம்!
சண்ட தீவிரமடைய போகுது.. பீடல் காஸ்ட்ரோ, வாழும் சேகுவேரா, வாழும் காமராஜர், அய்யா தமிழருவி மணியன்னு சொல்ற கடைசி கருணை.. அரிசி குருணை.. அய்யா ரஜினி கட்சி ஆரம்பிச்சு வரப்போராருனு சொல்றாங்க, தம்பி விஜய் படத்துல வரமாதிரி ஐ அம் வெய்டிங்'.. வெயிட்டிங்.. வெயிட்டிங்.. வா.. சண்டை வலுவா நடக்கும். மானத்தமிழனா, மராட்டியனா என்பதை அப்போ பாக்கலாம்" என்று பேசினார்.

No comments